விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த நவம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த ஒரு விழாவில் இந்து கோயில்கள் பற்றி பேசினார். இது சர்ச்சைக்குள்ளானதை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், திருமாவளவனை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை இந்து முன்னணியினர் நடத்தினர். இதனிடையே பெரம்பலூர் இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது 153(B),295(A),298&504 IPC உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சிக்ஸ் பேக்' நடிகை ஹாலே பெர்ரிக்கு திடீர் காயம்!