பெரம்பலூர் மாவட்டம் எறையூர் பகுதியில் அரசு பொதுத்துறை நிறுவனமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்க வேண்டுமென உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பெரம்பலூர் மூன்று கோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 2015-16ஆம் ஆண்டு மற்றும் 2016-17ஆம் ஆண்டு வெட்டிய கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையோடு ரூபாய் 32 கோடியை உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசானது 2015ஆம் ஆண்டு முதல் கரும்பு விலையை உயர்த்தாமல் உள்ளது. எனவே கரும்பை டன் ஒன்றுக்கு ரூபாய் 5000 உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு பேரவைக் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தக்கூடாது என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானங்கள் தீபாவளி பண்டிகைக்கு முன்பு நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் இந்த ஆண்டு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் கரும்பை வெட்டி அனுப்பாமல், ஆலையை நடத்த விடாமல் முற்றுகையிடுவோம் எனத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த தயார்': விக்கிரமராஜா