ETV Bharat / state

நிவாரண நிதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

பெரம்பலூர்: கரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Jul 6, 2020, 2:52 PM IST

farmers association protest in perambalur

ஊரடங்கால் விவசாயத் தொழில் பாதிப்படைந்து, வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூரில் கோரிக்கை முழக்கப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ”வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ள எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்தவித நிவாரணமும் அளிக்கவில்லை. எனவே, கரோனா பாதிப்பிற்கான பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்

மத்திய அரசு நடப்பாண்டில் நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருள்களின் அடிப்படைக் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மத்திய அரசு உடனடியாக வரைவு திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும்“ என்று வலியுறுத்தினர். பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பருத்தி மாலை அணிந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.