பெரம்பலூர் மாவட்டம், புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில், உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்தனர். அப்போது தங்களுக்கு 25 நாட்களாக கோரிக்கை வைத்தும் மின் பழுதை ஏன் சரிசெய்யவில்லை எனக்கூறி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுவதாவது, புஜங்கராயநல்லூரில் மின்மோட்டாரை நம்பி, 200 ஏக்கரில் கரும்பு, கத்தரி மற்றும் தக்காளி போன்றவை பயிரிட்டுள்ளோம் என்றும், மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை 25 நாட்களுக்கு மேல் ஆகியும் சரிசெய்யவில்லை என்பதால், விவசாயப்பயிர்கள் நீர் இல்லாமல் கருகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்திய போதும் மின்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக, புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டினர். அதன் பின்னர், மின் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: மாவட்ட வாரியான விவரம்