பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மனைவி மைதிலி. இவர் இன்று (டிச.10) காலை தனது வீட்டிலிருந்து குப்பை கொட்டுவதற்காக சாலை பகுதிக்கு வந்தார்.
அவர் வருவதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மைதிலி கழுத்தில் கிடந்த எட்டரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். இருப்பினும் கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கை.களத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் மாட்டுத் தீவன சோளத்தட்டு அறுவடை தீவிரம்!