ETV Bharat / state

விசிக மாநில நிர்வாகியிடமிருந்து ரூ.2 கோடி பறிமுதல்! தேர்தல் பறக்கும்படை அதிரடி - விசிக நிர்வாகி தங்கதுரை

பெரம்பலூர்: திருச்சியிலிருந்து விசிக மாநில நிர்வாகி தங்கதுரை உள்ளிட்ட நான்கு பேர் காரில் மறைத்து கொண்டுவந்த சுமார் இரண்டு கோடியே 10 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

VCK Thangadurai
author img

By

Published : Apr 3, 2019, 9:05 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் போன்றவற்றை விநியோகிப்பதைத் தடுப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் அருகேபேரளி டோல்வே பகுதியில் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறை காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர்ரங்கராஜன் தலைமையில் காவல் துறையைச் சேர்ந்த குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருச்சியிலிருந்து வந்த டாடா சஃபாரி TN-31BU-0585 என்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கோடிக்கணக்கில் பணம் மறைத்து வைத்த கொண்டுவந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் அவருடன் மூன்று பேர் உடனிருந்தனர்.

இதையடுத்துவாகனத்தை பறிமுதல் செய்துபெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு தேர்தல் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் வாகனம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது வாகனத்தின் பல்வேறு பகுதிகளில்சுமார் இரண்டு கோடியே 10 லட்ச ரூபாய் பணம் மறைத்து வைத்திருந்ததுகண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து பறிமுதல் செய்த பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

வி.சி.க நிர்வாகியிடம் ணம் பறிமுதல்

பெரம்பலூர் - ஏப்-03/19 பெரம்பலூர் அருகே வி.சி.க நிர்வாகி காரில் நூதன முறையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ 2 கோடியே 10 இலட்சம் பணம் பறிமுதல் செய்து விசாரணை. பெரம்பலூர் அருகே பேரளி டோல்வே பகுதியில் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறை ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான காவல்துறையை சேர்ந்த குழுவினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து வந்த டாடா சாபாரி TN -31BU- 0585 என்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது அவ்வாகனத்தில் கோடிக்கணக்கில் பணம் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது . இதையடுத்து அந்த வாகனத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் வாகனத்தை சோதனையிட்டதில் வாகனத்தில் பல்வேறு பகுதியில் மறைத்து கொண்டு வரப்பட்ட 2 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தங்கதுரை, மற்றும் அவருடன் சேர்ந்த மூன்று பேர் இந்த பணத்தை திருச்சியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.