பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நேற்று (ஏப்.8) மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனிடையே பெரம்பலூர் அருகே குரும்பலூர் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டன.
நேற்று பெய்த கோடை மழையின்போது வீசிய பலத்த காற்றால் வாழைக் குலையுடன் இருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமாகின.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் வேதனையடைந்துவரும் சூழலில், இந்த சூறாவளி காற்றால் வாழை மரங்கள் நாசமானது அப்பகுதி விவசாயிகளை மேலும் வேதனையடைய செய்துள்ளது.