பெரம்பலூர் மாவட்ட டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், கால்பந்து, கைப்பந்து, கபடி, சதுரங்கப் போட்டி, கேரம், இறகுப்பந்து, கோக்கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இப்போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்தப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டிகள் 14, 17, 19 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:பாய்மர படகுப்போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற தொண்டி மீனவர்கள்