கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனிடையே கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்தது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் பகுதியில் பிரபல தனியார் டயர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் டயர் தொழிற்சாலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.