ETV Bharat / state

கரோனா ஊரடங்கு : கவலையில் கடலை விவசாயிகள் - கவனிக்குமா அரசு! - Distressed farmers in Perambalur district

பெரம்பலூர் : தமிழ்நாடு அரசின் முழு ஊரடங்கு உத்தரவால் சாகுபடி செய்யப்பட்ட விளை பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் பெரம்பலூர் மாவட்ட கடலை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கவலையில் கடலை விவசாயிகள்
கவலையில் கடலை விவசாயிகள்
author img

By

Published : Apr 4, 2020, 8:02 AM IST

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று கடந்த 20 நாள்களாக இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகரித்து இரண்டாம் நிலையை அடைந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஏழை எளிய மக்கள், இடம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஊரடங்கு உத்தரவின் காரணமாக தாங்கள் பயிரிட்ட, சாகுபடி செய்த பொருள்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

குறிப்பாக, விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தின் அடைக்கம்பட்டி, நக்கசேலம், அம்மாபாளையம், செட்டிக்குளம், சதிரமனை, குரும்பலூர், நொச்சியம், ஆலத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடலை சாகுபடியை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இதனிடையே, அறுவடை முடிந்த இந்த காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அறுவடை செய்த கடலையை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடலை பயிரிடப்பட்ட பெரும்பாலான நிலங்களில் பயிர்களில் பூச்சி வெட்டு தாக்குதலால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

கவலையில் கடலை விவசாயிகள்
கவலையில் கடலை விவசாயிகள்

வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் ஒருபக்கம், வாழ்வாதாரம் பாதிப்பு மறுபக்கம் என பெரும் வேதனையில் கடலை விவசாயிகள் உழன்று வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் மத்திய - மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பிரதமரிடம் எதிர்காலப் பார்வை இல்லை'- சசிதரூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.