பெரம்பலூர் மாவட்டம், வேளாண்மையை முதன்மையாகக் கொண்டதாகும். இம்மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
சாகுபடி செய்யப்படும் பகுதிகள்
அதேபோல், பாடாலூர், செட்டிகுளம், ஆலத்தூர், நாட்டார்மங்கலம், நக்கசேலம், அடைக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன.
வேர் அழுகல் நோய்த் தாக்கம்
இந்நிலையில், இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வேர் அழுகல் நோயால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் பாதிப்படைந்தது. இதனிடையே, வடக்கம்பட்டி கிராமத்தில் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு எதற்கும் உதவாத சின்ன வெங்காயத்தை டிராக்டர் மூலம் விவசாயிகள் அழித்துவருகின்றனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "நாங்கள் மழையை எதிர்பார்த்து கஷ்டப்பட்டு சாகுபடி செய்தாலும் வேர் அழுகல் நோய் பாதிப்பு எங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று வேதனையோடு தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சின்ன வெங்காயம் விலை உயர்வு : விவசாயிகள் கொண்டாட்டம், மக்கள் திண்டாட்டம்!