பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி நேற்று கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த ஆறு பேரை கைதுசெய்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று (ஜூன் 3) காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரியில் ஆய்வுசெய்தனர். அப்போது பெருமாள் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக 200 லிட்டர் ஊறல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பெருமாளை கைதுசெய்த காவல் துறையினர் ஊறலை அழித்து விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து லிட்டர் சாராயத்தைப் பறிமுதல்செய்தனர்.
அதேபோல் கவுண்டர்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மாணிக்கம் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டிருப்பதைக் கண்டுபிடித்த காவல் துறையினர் அங்கிருந்த 200 லிட்டர் ஊறலை கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற பெருமாளை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்த ஐந்து லிட்டர் சாராயத்தைப் பறிமுதல்செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு நாள்களில் கள்ளச்சாராயம் தொடர்பாக எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாவட்டங்கள்தோறும் குழந்தைகளுக்கான கரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் கீதா ஜீவன்