வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி தமிழ்நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், அனைத்து தொழிற்சங்கம், விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ஊராட்சித் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!