பெரம்பலூர்: வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வேளாண் திருத்தசசட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தேசம் தழுவிய அளவில் முற்றுகை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி தலைமையில் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: துணை மின்நிலையத்தை தனியார் பராமரிப்பதற்குவிட அனுமதி வழங்கிய உத்தரவு ரத்து!