ETV Bharat / state

பெரம்பலூரில் கைவினைக் கலைஞர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

பெரம்பலூர்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கைவினைக் கலைஞர்கள் டாம்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தலைவர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Craftsmen Can Apply For A Loan In Perambalur

author img

By

Published : Sep 17, 2020, 5:11 PM IST

இது தொடர்பாக அவர் செய்திக் குறிப்பில், "பெரம்பலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஏற்கனவே தனிநபர் கடன் சுய உதவி குழு கடன், கல்விக் கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகம் விராசாட்(VIRASAT) என்ற கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு நிபந்தனைகள்படி குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ. 98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரமும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில், பெண்களுக்கு நான்கு சதவீத வட்டி விகித்திலும் ஆண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம்வரை கடன் உதவி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையைப் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் என்எம்டிஎப்சி (NMDFC) மூலம் 90 விழுக்காடு கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 5 விழுக்காடு கடன் தொகையும், விண்ணப்பதாரரின் பங்கு தொகை 5 விழுக்காடு சேர்த்து கடன் உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.