பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர், அ. குடிக்காடு, நெய் குப்பை உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட பசு, காளை மாடுகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுவருகின்றன. மாடுகளின் கழுத்து, உடல் பகுதியில் பெரிய கட்டி போன்று உருவாகி அம்மை நோய் பரவிவருகிறது.
இதனிடையே, நோய்த்தடுக்கும் தடுப்பு மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் போதுமானதாக இல்லாத காரணத்தால் தற்போது கால்நடை வளர்ப்போர் வெற்றிலை, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நாட்டு வைத்தியம் செய்வதில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நோய் பாதிப்பால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கணக்கெடுத்து, சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களை அமைத்து, சிகிச்சை அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிராமத்திற்குள் சுற்றித்திரியும் ஒற்றை யானை: முதுமலையிலிருந்து 2 கும்கி யானைகள் வரவழைப்பு!