பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று(நவ.5) மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அதிலும் குறிப்பாக நொச்சியம், புது நடுவலூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் இதில் நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தாவின் இரண்டு மாடுகளும், பழனியாண்டியின் ஒரு மாடும், மகேந்திரனின் இரண்டு கறவை மாடுகளும், கோவிந்தனின் ஒரு மாடும், வயலில் கட்டிப் போட்டிருந்த நிலையில் இடிதாக்கி உயிரிழந்தது.
மூன்று கிராமங்களில் மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.