பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பட்டியலினத்தைச் சேர்ந்த நாகஜோதி. அங்கு பாடாலூர் ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த விஜயபிரபு.
இந்நிலையில் ஒன்றிய கவுன்சிலர் விஜய பிரபு நேற்று மாலை பாடாலூர் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து தலைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதியின் கணவர், தலைவர் இருக்கையில் ஏன் அமர்ந்துள்ளீர்கள்? எனக் கேட்டதற்கு நானும் ஒரு மக்கள் பிரதிநிதி என்று அடாவடியாக பதிலளித்துள்ளார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:கசந்த காதல் திருமணம் - ஆதரவின்றி தவிக்கும் பெண் வெளியிட்ட காணொலி வைரல்!