தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினம்தோறும் 5 ஆயிரத்தை தாண்டுகிறது.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று (ஆகஸ்ட் 21) மட்டும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,116ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே குன்னம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்பட 5 காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிநடைபெற்று வருகிறது.
மேலும், தொற்றிலிருந்து 849 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 252 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உள்ளது.