கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீதிமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் , ஆகியோருக்கு கைகளை சுத்தம் செய்தல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், நீதிமன்ற வளாகம் சுற்றியும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை