பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பாடலூர், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை சேமித்து வைக்க கிடங்குகள் உள்ளன.
இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரிய வெங்காய வியாபாரிகள், ஆலத்தூர் வட்டார பகுதிகளில் கிடங்குகளை வாடகைக்கு எடுத்து பெரிய வெங்காயத்தை பதுக்கிவந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த திருச்சி உட்கோட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பெரம்பலூரில் இருர், கூத்தனூர் சாலை, மங்குன், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட நான்கு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயக் கிடங்குகளை ஆய்வு செய்தனர். பின்னர், வெளிமாவட்ட வியாபாரிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.
![Confiscation of 450 tonnes of stored onions in perambalur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-01-pellari-onion-confiscation-script-vis-7205953_09112020144328_0911f_01262_237.jpg)
பறிமுதல் செய்யப்பட்ட பெரிய வெங்காயம் கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலம் அங்காடிகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: விண்ணைத்தொடும் வெங்காய விலை உயர்வு : அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?