ETV Bharat / state

பெரம்பலூரில் இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்பாட்டம் - இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெரம்பலூர் : கரோனா ஊரடங்கால் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்ககோரி இடதுசாரிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Communist protest
இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்
author img

By

Published : Jun 10, 2020, 4:16 PM IST

பெரம்பலூர், பாலக்கரை பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மத்திய, மாநில அரசுகளிடம் உரிய நிவாரணத் தொகை கோரி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினர்.

இதில், ”ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு 7,500 ரூபாய், மாநில அரசு 5,000 ரூபாய் வழங்க வேண்டும். கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தை, இருநூறு நாள்களாக அதிகரித்து நகர்ப்புற ஏழைகளுக்கு விரிவாக்கம் செய்திட வேண்டும். ஊரடங்கால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சாகுபடி இழப்பீட்டுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் வஞ்சகமான மின்சார திருத்த சட்டம் 2020ஐ கைவிட வேண்டும்.

விவசாயப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகிக் கொண்டு, அதை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அவசரச் சட்டங்களை கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.