ETV Bharat / state

எழுத்துகளால் கருணாநிதி படத்தை வரைந்த கல்லூரி மாணவர் - குவியும் அப்லாஸ் - கருணாநிதி உருவத்தை வரைந்த மாணவர்

பெரம்பலூரில் குறளோவியம் புத்தகத்திலுள்ள எழுத்துகளை வைத்து கருணாநிதியின் உருவத்தை ஓவியமாக வரைந்த மாணவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

எழுத்துகளால் கருணாநிதி படத்தை வரைந்த கல்லூரி மாணவர்

author img

By

Published : Jul 25, 2021, 11:08 AM IST

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், நரசிம்மன். கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் ஆர்க்கிடெக் படிப்பு பயின்று வரும் இவர், இளம் வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

பல்வேறு ஓவிய படைப்புகளையும் வரைந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய ‘குறளோவியம்’ புத்தகத்திலுள்ள வரிகளை வைத்து சுமார் 40ஆயிரம் எழுத்துகளால், கலைஞர் கருணாநிதியின் உருவத்தை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.

மாணவருக்கு குவியும் பாராட்டு

தொடர்ந்து 3 நாள்களாக இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். ஏற்கெனவே 3ஆயிரம் முத்தங்களால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓவியத்தை இவர் வரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் படம் வரைந்த மாணவர்

இவரது ஓவியத்தைக் கண்ட பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி ’மோனலிசா’ ஓவியம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.