பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேள்வி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் உதயசூரியன் - இளையராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் தங்களது வங்கிக் கணக்கில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு முழுமையான நிதி உதவி பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உதயசூரியன், இளையராணி தம்பதியினர் தங்களது குழந்தைகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சமூக நலத்துறை, காவல் துறையினர் நிதி உதவி பெறுவதற்கு குடும்ப கட்டுப்பாடு செய்தால் மட்டுமே பணம் ஏறும் என்று கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: