ETV Bharat / state

சின்ன வெங்காயம் பயிரினை பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்திட  அறிவுறுத்தல்

author img

By

Published : Sep 28, 2020, 8:24 AM IST

பெரம்பலூர்: அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி சின்ன வெங்காயம் பயிரினை பூஞ்சை நோயிலிருந்து விவசாயிகள் பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பெரம்பலூர் மாவட்டத்தில் ஆவணி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட சின்னவெங்காயம் பயிரானது தற்பொழுது 40 முதல் 50 நாள் வயதுடைய பயிராக உள்ளது.

சில பகுதிகளில் சின்னவெங்காயம் பயிரானது நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது குறிப்பாக எதிரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நோயானது கொலிட்டோ டிரைக்கம் கிளோஸ் போரியாய்ட்ஸ் எனப்படும் ஒரு வகை பூஞ்சை மூலம் உருவாகிறது. இந்த நோய் கருகல் நோய், பறவைக் கண் நோய் எனவும் அழைக்கப்படும்.

பூஞ்சை பாதித்த செடிகளின் தாள்களில் வெளிர் மஞ்சள் நிற நீள் வட்டப்புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட கால்கள் மடிந்து தொங்கும். அடுத்தக்கட்டமாக வெங்காயத்தில் கழுத்துப் பகுதியில் நீண்டு குமிலங்கள் சிறுத்துக் காணப்படும். தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகி விடும்.

இந்த நோயானது 50 முதல் 100 விழுக்காடுவரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும். பாதிப்பிற்குள்ளான செடிகளை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது.

ஆனால் மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம். இதற்கு தாக்குதல் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்திவிட்டு, பூஞ்சாணக் கொல்லிகள் தெளிக்க வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு கர்பென்டாசிம் பூஞ்சாண கொல்லி ஒரு கிராம் என்ற அளவில் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்கலாம்.

மாற்றாக புரோபிகோனசோல் 25 EC
அல்லது ஹெக்சகோனசோல் 5 EC
இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சாணக் கொல்லியை ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் வீதம் இலை வழியாக தெளிக்கலாம்.

இப்பூஞ்சை ஆனது நிலத்தில் பல ஆண்டுகாலம் வளரும் தன்மை பெற்றது. எனவே பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டுவைக்காமல் பொறுக்கி காய வைத்து எரித்துவிடவேண்டும்.

பயிர் சுழற்சி முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோ டெர்மா ஹார்சியானம் என்னும் உயிர் கட்டுப்பாட்டு பொருளை எளிதில் கலந்து நிலத்தின் மூலம் இந்த பூஞ்சையின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்" என தெரிவித்துள்ளார்.

மேலும் பொம்மனப்பாடி, இரூர் நாட்டார்மங்கலம், செட்டிக்குளம் கிராமத்தில் நோய் தாக்கிய சின்ன வெங்காய வயலை தோட்டக்கலை துணை இயக்குநர் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை களப்பணியாளர்கள் பார்வையிட்டு நோய்த்தடுப்பு மற்றும் நோய் மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.