பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் தூய்மை இந்தியாவை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிராமங்கள்தோறும் தூய்மையை வலியுறுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை, கல்வித்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: நடுக்கடலில் தொடுவாய் மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல்!