பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (நவ. 17) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் குழந்தைகள், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளை விசாரிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒருவரை குழந்தை நல அலுவலராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் நியமனம் செய்தார். குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நீதிராஜ், சமூக நல அலுவலர் திருமதி. ரூபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... 'மழலையின் பல் பராமரிப்பு... புன்னகையின் திறவுகோல்!'