ETV Bharat / state

கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு! - லாடபுரம் அருகே விபத்து

பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

car-and-bike-accident-near-preambular
கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு
author img

By

Published : Aug 2, 2021, 1:37 AM IST

பெரம்பலூர்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே உள்ள காரை பிரிவு பாதையில் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியசாமியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது பேரக்குழந்தைகள் அஜய், பரணி ஆகிய இரண்டு சிறுவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், காரில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த புனிதன், அவரது மனைவி ஷீலா, காரின் ஓட்டுநர் இளம்பருதி
ஆகிய மூவரும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.

இவ்விபத்து குறித்து பாடாலூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ’சங்கரய்யாவிற்கு கொடுத்த விருதை எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்’ - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.