பெரம்பலூர்: திண்டுக்கல்லை சேர்ந்த கமலக்கண்ணன்-லதா தம்பதியினர், இவர்களது உறவினர்கள் திருவாரூரைச் சேர்ந்த வேம்பு, வேம்பு மகன் ராமச்சந்திரன் மற்றும் கோவையைச் சேர்ந்த மணிமேகலை ஆகிய ஐந்து பேர் ஒரே காரில் திண்டுக்கல்லிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டி சென்றுள்ளார்.
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் இன்று(ஏப்ரல் 24) சென்று கொண்டிருந்த போது கார் ஓட்டுநரில் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சுமார் 100 அடி தூரம் இழுத்துச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கமலக்கண்ணன், அவரது மனைவி லதா மற்றும் உறவினர் திருவாரூரைச் சேர்ந்த வேம்பு ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அவர்களுடன் பயணம் செய்த திருவாரூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், கோவையைச் சேர்ந்த மணிமேகலை ஆகியோர் லேசான காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து பாடாலூர் காவல்துறையினர் ர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கமலக்கண்ணன் திண்டுக்கல் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிவருகிறார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Video: பெண்ணிடம் தவறாக நடந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்கமாற்றால் அடி