ETV Bharat / state

சி.ஏ.ஏ.வுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழ்நாடு...! - நாகப்பட்டினம்

பெரம்பலூர், விருதுநகர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

author img

By

Published : Jan 31, 2020, 3:32 PM IST

அண்மையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தினை கொண்டுவந்து நிறைவேற்றினார். பின்னர் இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமானது.

இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

பெரம்பலூர்

இந்நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்

இதேபோன்று நாகூரிலிருந்து நாகைவரை இஸ்லாமியர்கள் சார்பாக மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நாகூர், பால்பண்ணைசேரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் கைகோத்தபடி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தியும் கோரிக்கைவைத்தனர். மனிதச் சங்கிலி போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பங்கேற்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள், அனைத்துக் கட்சியினர் சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம்

இந்திய மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை கெடுக்கும் சட்டமாக இருக்கிறது. மக்களிடையே மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்தச் சட்டம் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க :தஞ்சை கோயிலில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவதை மன்னிக்கவே முடியாது’

Intro:குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Body:குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பெரம்பலூர் பழைய பேரூந்து நிலையம் காந்தி சிலை அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர் இந்த போராட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர் இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்

Conclusion:இந்த போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.