பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன் நகரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.
இந்தப் பணியில் தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டும் பணியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இதில் சேலம் மாவட்டம் நாகியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன்(50) என்பவர் கிணறு தோண்டும் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ராட்சத இயந்திரத்தில் உள்ள ஒரு பாகம் தலையில் விழுந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமுற்றவர்.சம்பவ இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடலினை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை செய்யும் ஐபிஎஸ் அலுவலர் மீது புகார்