பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் அதன் உறுப்பினர் ச. மோகன் எழுதிய 'இந்த நூற்றாண்டின் போதிமரம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில செயலாளர் நாணற்காடன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கவிஞர்கள் உள்பட பலரும் பங்கேற்று நூல் குறித்து மதிப்பீட்டுரை வழங்கினர்.
மேலும் இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.