பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நகராட்சி எல்லைக்குள் புதிதாக வீடு கட்டி வருகிறார். தனது வீட்டிற்கு புதிதாக வரி நிர்ணயம் செய்வதற்காக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அங்கு பில் கலெக்டராக பணியாற்றி வரும் நகராட்சி ஊழியர் அப்பு என்கிற அப்புலோஸ் என்பவர், வரியை குறைத்து போடுவதற்கும், வரி நிர்ணயம் செய்வதற்கும், தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று வெங்கடேசனை நிர்பந்தித்துள்ளார். அப்புலோஸ்க்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இது குறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
வெங்கடேசனின் புகாரின் பேரில் பெரம்பலூர் லஞ்சம் ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா மற்றும் ஆய்வாளர்கள் ரத்தின வள்ளி, சுலோச்சனா ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வெங்கசேசனிடமிருந்து லஞ்சப் பணம் ரூ.15 ஆயிரத்தை அப்புலோஸ் வாங்கிய போது, அவரைக் கையும் களவுமாக பிடித்தனர். இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தினால் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக முதியவரை கொலை செய்த 14 பேர் கைது!