கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்ததையடுத்து, சில மாதங்களாக தங்களது தொழில் முன்னேற்றம் அடைந்துவந்தது. ஆனால் தற்போது கரோனா வைரஸால் உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தங்களால் பாக்கு மட்டைகள் தயாரிக்க இயலவில்லை எனவும், முன்னதாக தயாரித்த பாக்கு மட்டைகளை விற்பனை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வெறிச்சோடிக் கிடக்கும் கோழிப்பண்ணைகள்