கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில், கரோனாவால் மொத்தம் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வி.களத்தூர் கிராமத்தில் காவலர் உள்பட மொத்தம் மூன்று பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, ஊர் முழுவதும் சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே இங்கு செயல்பட்டு வந்த இந்தியன் ஒவர்சீஸ் வங்கி 20 நாட்களுக்கு மேலாகச் செயல்படவில்லை எனவும், தன்னியக்கச் சொல்லி இயந்திரம் (ATM) சரியான முறையில் செயல்படவில்லை எனவும்;
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கூட பணம் எடுக்க முடியாததாலும், பணம் பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாகவும் நடமாடும் வங்கியை தற்காலிகமாக அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ. 1.5 கோடியை எட்டிய அபராதம்! காவல்துறையின் முயற்சிகள் விழலுக்கிறைத்த நீரானது!