பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், மக்கள் மிகவும் அவதியுற்று இருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு (மே 8) பெரம்பலூர், வேப்பந்தட்டை, பாடாலூர், கிருஷ்ணாபுரம், தழுதாழை, விகளத்தூர், பெரிய வடகரை நெற்குணம், செஞ்சேரி உள்ளிட்ட பல கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம் பெரிய வடகரை கிராமத்தில் மாணிக்கம் என்பவர் தனது வயலில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு அடித்த சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்தன.
மழை இல்லாத காரணத்தால் அதிக செலவு செய்து வாழை சாகுபடி செய்த நிலையில், சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.