பெரம்பலூர் அருகே உள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், கிருஷ்ணாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனது மருமகன் பாலமுருகனிடம் பணம் எடுத்து வரச்சொல்லி அவரது ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.
ஆத்தூர் சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற பாலமுருகன், வரிசையில் தனது பின்னால் நின்ற நபரிடம் பணம் எடுக்க உதவுமாறு கேட்டுள்ளார். பின்னர், அவரிடம் ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்ட அடையாளம் தெரியாத நபர், பாலமுருகனின் கவனத்தை திசை திருப்பி தான் கொண்டுவந்த போலி ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.
பின்னர் பாலமுருகனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளர். தனது வங்கிகணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த மின்வாரிய ஊழியர் பாலகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: உசாரய்யா... உசாரு... ஏடிஎம் கார்டை திருடி 1.35 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த பெண்!