பெரம்பலூர்: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல கூழித்தொழிலாளிகள் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
அந்தவகையில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் வேலைபார்த்து வந்த பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த பானு என்பவர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளார். இவரது கணவரும் வேலை இழந்த நிலையில், மூன்று குழந்தைகளுடன் சிரமப்பட்டுவந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தனியார் உணவத்தினர், அந்தப் பெண் கூலித்தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
கூலித்தொழிலாளியின் குடும்பத்திற்கு 1 மூட்டை அரிசி, 1 மாதத்திற்குத் தேவையான மளிகைபொருள்கள், காய்கறிகள் ஆகிய நிவாரணப்பொருள்களை தனியார் குழுமத்தலைவர் கே.ஆர்.வி.கணேசன் வழங்கினார்.
இதையும் படிங்க: மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு!