பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் திவ்யபிரியா. இவர் அண்மையில் நடந்த விபத்தில் காயமுற்று திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனிடையே, சிகிச்சை செலவுக்காக உதவிக்கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் சக காவலர்கள், உறவினர்கள் இணைந்து ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 918 ரூபாய் நிதி திரட்டினர். அந்த தொகையை திவ்ய பிரியாவின் உறவினர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வழங்கினார்.