பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வி.களத்தூர் கிராமத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பெரிய ஏரியானது, பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரம்பியுள்ளது. இதனிடையே ஏரியின் மதகு பாழடைந்துள்ளதால், அதிகப்படியான நீர் வெளியேறி வீணாகி வந்தது.
இதுகுறித்து பொதுப்பணித்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, மதகு சரி செய்யப்பட்டிருந்தாலும், மீண்டும் நீர் வெளியேறிய வண்ணமிருந்ததால், அக்கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவரும் வழக்கறிஞருமான கோ.பிரபு தானே முன்வந்து மதகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

நீர் வெளியேறும் இடைவெளிகளை சிமெண்ட் கலவைக் கொண்டு, அவரே அடைத்தார். அவரின் இந்த செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அவருக்கு சமூக ஊடகங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பாதிப்பு: சேலத்தில் 54 பேர் தொடர் கண்காணிப்பு