பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள சங்கு பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டி என்கிற வல்லத்தரசு, சூர்யா ஆகிய இருவரையும், பத்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது.
சம்பவ இடத்திலேயே பாண்டி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சூர்யா பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். கொலை செய்யப்பட்ட பாண்டி அமுமுக நகர மாணவரணிச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார்.
கொலை தொடர்பாக பெரம்பலூர் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் இரண்டாவது நாளாக அடுத்தடுத்து கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரவுடி கொலை - ஒரு தலை காதல் விவகாரம் காரணமா?