தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கடந்த 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இதையடுத்து முதியோர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் 10 பவுன் நகை, பணம் திருட்டு!