நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான அருள், இரண்டு நாட்களுக்கும் முன்பு, பெரம்பலூர் காவல் துறையிடம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் சிலர் நபர்கள் இளம் பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னிடம் பேசியதாக ஆடியோ ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே, இந்தப் புகார் இளம்பை தமிழ்ச்செல்வன் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாலியல் புகார் அளித்த வழக்கறிஞர் அருள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் அதிமுக மகளிர் அணி சார்பில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.