'தேசிய ஒற்றுமை காப்போம் மத நல்லிணக்கத்தை வளர்ப்போம்' என்பதை வலியுறுத்தி சென்னை முதல் திருச்சி வரை தொடர் நடைபயணம், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே, இந்த நடைபயணம் பெரம்பலூர் வழியாகச் சென்றபோது ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காரணம் இல்லை. இந்தக் கலவரத்திற்கு முழுக்கமுழுக்க பாஜக அரசுதான் காரணம்.
இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது பாஜக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாதான் எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கலவரத்தைத் தடுக்க தவறிவிட்டார். மாறாக கலவரத்திற்கு காரணமாகிவிட்டார். ஆகையால் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாற்று சாதி காதலை எதிர்க்கும் மனநோயளிகளை தோலுரிக்கிறது 'கன்னிமாடம்' - திருமாவளவன்