ETV Bharat / state

ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய நபர்: பணம், நகைகளை மீட்டுத்தரக்கோரி பெண் தர்ணா! - Dharna in Perambalur

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆசை வார்த்தைக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரிடமிருந்து தன்னுடைய 8 லட்சம் ரூபாய் பணத்தையும் 35 சவரன் நகையையும் திரும்ப தர வேண்டி தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

dharna
dharna
author img

By

Published : Mar 1, 2021, 10:37 PM IST

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேல் என்பவரின் மனைவி மகாலட்சுமி. பட்டிமன்றப் பேச்சாளராக உள்ள இவர், கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் திருச்செந்தூரில் வசித்துவருகிறார்.

தர்ணாவில் ஈடுபட்ட பெண்

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மகாலட்சுமி வீடு அருகில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஆசை வார்த்தைக் கூறி மகாலட்சுமியிடமிருந்து ஜெகன், எட்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் 35 சவரன் நகைகளையும் வாங்கிக் கொண்டு மகாலட்சுமியை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர்
தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை

ஜெகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பெரம்பலூரில் உள்ள ஜெகனின் வீட்டு முன்பு, மகாலட்சுமி தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தனது பணம், நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.