பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 7,000 சதுர அடிகள் வரையிலான குடியிருப்பு மற்றும் 2,000 சதுர அடிகள் வரையிலான வணிக கட்டடங்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் இடங்கள், அதற்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் மனைப்பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கட்டடம் கட்ட முனைவோர்கள், துறைமங்கலம் பகுதியிலுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அனுமதி பெறப்பட்ட விவரத்தை விளம்பரப் பலகையில் குறிப்பிட்டு கட்டுமானம் நடைபெறும் இடத்தில் முன் பகுதியில் வைக்கப்படவேண்டும்.
அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 இன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, புதிய கட்டுமான பணிகள் தொடங்க உள்ளவர்கள் முறையான அனுமதி பெற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் பொதுமக்களுக்கு டிஎஸ்பி விழிப்புணர்வு!