பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் அருகே தெரணி செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது.
இந்தக் கடையில் மேற்பார்வையாளராக மணிவண்ணன் என்பவரும், விற்பனையாளராக சுரேஷ் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு வந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அரிவாளை காட்டி மிரட்டி மதுபான விற்பனை தொகையான 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து மேற்பார்வையாளர் மணிவண்ணன் இன்று (செப்.15) பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாடாலூர் காவல்துறையினர் பணத்தை பறித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.