ETV Bharat / state

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு பெட்டகம் - சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர் - கரோனா தொற்று தடுப்பு பெட்டகத்தை மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களின் சிகிச்சைக்கு தேவையான கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பெட்டகத்தை மாவட்ட ஆட்சியர் சுகாதாரத் துறையினரிடம் வழங்கினார்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு 2500 கரோனா வைரஸ் தடுப்பு பெட்டகம் - மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Aug 31, 2020, 8:42 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசின் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு வழங்குவதற்காக 2500 கரோனா தொற்று தடுப்பு பெட்டகத்தை சுகாதாரத் துறையினரிடம் வழங்கினார்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இம்மருந்து பெட்டகம் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள விரும்பும் நபர்களுக்கு சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்பட உள்ளது. இப்பெட்டகத்தில் கபசுரக் குடிநீர் 50 கிராம் அளவில் மூன்று பொட்டலங்கள், முகக்கவசம், 15 மல்டி விட்டமின் மாத்திரைகள், 30 ஜிங்க் சல்பேட் மாத்திரைகள், 30 கை கழுவும் சோப்புக்கட்டி, 35 கிராம் கிருமிநாசினி 100 மில்லி அளவில் ஒன்று ஆகியவை அடங்கியுள்ளன.

இதனை முறையாக பயன்படுத்தி பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் கீதாராணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.