உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டிலும் அதன் தீவிரம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 133 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏற்கனவே 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மே 12ஆம் தேதி 20 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இச்சூழலில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்து சென்றவர்களுக்கு குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் பழங்கள் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பினார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதாராணி அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர் ராஜா மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு