ஆண்டுதோறும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள தாய்மார்கள் பயனடையும் வகையில், தேர்வு செய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கு வைப்பு நிதிப் பத்திரம் வழங்கப்பட்டது.
38 தாய்மார்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் 76 பெண் குழந்தைகளுக்கு 19 லட்சம் மதிப்பிலான வைப்பு நிதி பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பெண் குழந்தைகள் 18 வயது முதிர்வு அடைந்த பின் வைப்புநிதி அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். எனவே பெற்றோர், ஆண் குழந்தைகளுக்கு இணையாகப் பெண் குழந்தைகளையும் பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் சக்தி கேந்திரா திட்ட மகளிர் நல அலுவலர் ஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளுக்கு ரூ.14 லட்சம் வழங்கல்!